Header Ads

Recent

9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

         கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் நேரடி வகுப்புகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் நேரடி வகுப்புகள் தொடங்கின.

         இந்நிலையில் மே 3ஆம் தேதி முதல் மே 21ஆம் தேதி வரை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
              10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு என கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணக்கர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் மாணவர்கள் பள்ளிகளுக்கு தொடர்ந்து வர வேண்டும் என கூறப்பட்டது.

            தற்போது அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

           அதன்படி ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுத் தேர்வு நடக்க உள்ள 12ஆம் வகுப்பை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

          கொரோனா பரவல் அதிகரிப்பு ஒரு பக்கம் என்றால், தேர்தல் பணிகளும் வேகமெடுத்துள்ளன. ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் இந்த கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments